தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், புதிய அமைச்சரவையில் பங்கேற்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த அதிரடி அழைப்பு குறித்துப் பேசிய ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், “தவெக அமைச்சரவையில் பங்கேற்பது தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை கட்சியின் உயர்மட்டக் குழுவைக் கூட்டி, விரிவாக ஆலோசித்து இறுதி முடிவை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து வந்த ஐயூஎம்எல் கட்சிக்கு தவெக வலைவீசியுள்ள இந்தச் சம்பவம், தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை எகிற வைத்துள்ளது.