மலையாள சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் மல்லிகா. இவர் தமிழில் சேரனின் ஆட்டோகிராப் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில்  பிரபலமானார். குறிப்பாக நடிகர் விஜயின் திருப்பாச்சி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் நடிகை மல்லிகா தற்போது விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளதோடு அவர் பிரச்சாரத்திற்கு அழைத்தால் கண்டிப்பாக அவருக்கு ஆதரவாக தான் பிரச்சாரத்திற்கு செல்வேன் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போதே நடிகை மல்லிகா விஜய் ஆதரவாக வீடியோ வெளியிட்டார். அதில் படப்பிடிப்பில் எல்லாம் ரொம்ப அமைதியா இருப்பாரு. ஆனால் புதிதாக கட்சி ஆரம்பித்தபோது மக்களிடம் அவர் பேசும்போதும் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி நடிக்க மாட்டார் அவர் பேசுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்லது செய்ய வந்தால் சில விஷயங்கள் நடக்கும் ஆனால் கண்டிப்பாக அவர் ஜெயிப்பது உறுதி. மேலும் கூட்டத்தில் சதி பண்ண வருவாங்க கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க அண்ணா என்று பதிவிட்டு இருந்தார். இவர் மலையாள இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.