தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அரசியலில் தடம் பதித்து வரும் நிலையில், மதுரையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மீது எழுந்துள்ள பண மோசடி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி, தவெக-வில் மகளிரணி பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் 26 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக ஷர்மிளா என்பவரின் கணவர் பாலாஜி மதுரை மாநகரக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜி, “பதவி தருவதாக ஆசை காட்டிய தங்கப்பாண்டி, எங்களிடம் இருந்து ஐ-போன், சோபா, பிரிண்டர் போன்ற பொருட்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் அவரது மகனின் ஜி-பே (GPay) எண்ணிற்குப் பலமுறை பணம் அனுப்பியுள்ளோம்; இதுவரை சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகவும் கொடுத்துள்ளோம்” என அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கட்சிப் பதவிக்காகப் பணம் கைமாறிய விவகாரம், மதுரையில் விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.