தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபி சத்யராஜ். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் நடிகர் விஜயின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கியதில் இருந்து அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார். அவரது தந்தை சத்யராஜ் திமுகவின் ஆதரவாளர். அதே நேரத்தில் அவரது சகோதரி திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்ததோடு தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார். கரூர் சம்பவத்தில் கூட விஜயை விமர்சித்து அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் நடிகர் சிபி சத்யராஜ் குஷி படத்தில் வரும் ஒரு காட்சியை பதிவிட்டு என்னை அல்ல என்னுடைய இமேஜை கூட தொட்டு பார்க்க முடியாது என்று விஜயின் வசனத்தை வீடியோவாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
குடும்பமே விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சிபி சத்யராஜ் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இன்று நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கிலும் தமிழக வெற்றி கழகம் மற்றும் விஜய்க்கு நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பியதோடு கடும் கண்டனங்களையும் பதிவு செய்திருந்தார். மேலும் இந்த நிலையில் சிபிசத்யராஜின் பதிவுக்கு தற்போது விஜயின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/stories/sibi_sathyaraj/3734626653532871265?utm_source=ig_story_item_share&igsh=MTY3cWk4cGFjd3hlag==
