தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணை வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது. அதன் பிறகு தவெக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் ஜாமீன் மனுவும் ரத்தானது.

அதே நேரத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இருவரும் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில் தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகள் விரைந்துள்ளது.

அதன் பிறகு சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்ட காரணத்திற்காக ஆதவ் அர்ஜுனா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக இவர்கள் மூவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய்க்கு இது பெரும் பின்னடைவாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.