தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்திகளை கேட்டு சினிமா வசனகர்த்தா வேலுமணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் நடித்த தேவன், எங்கள் ஆசான் மற்றும் விருதகிரி போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய வேலுமணி விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்தது முதல் சோகத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பு காரணமாக அவர் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.