புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் இந்தி நடிகர் ஜூனியர் மெஹமூத் (67) சிகிச்சை பலனின்றி காலமானார். 1967ஆம் ஆண்டு வெளியான ‘நவுனிகல்’ என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர், பரவரிஷ், தோ ஆவூர் தோ பாஞ்ச் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு நட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்