விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி சமீபத்தில் காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்த விஜய் இடைத்தேர்தல்கள் வேலைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாக்கியுள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமே இந்த ஏற்பாடு என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என ஐந்து முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.