தென்னாப்பிரிக்காவின் எம்புமலங்கா மாகாணத்தில் உள்ள கோமதி ஆற்றில் காணாமல் போன ஒரு தொழிலதிபரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், அங்கிருந்த ஒரு முதலையைக் கொன்று அதன் வயிற்றிலிருந்து மனித உடல் பாகங்களை மீட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்தத் தொழிலதிபரின் கார் ஆற்றுப்பாலத்தின் அடியில் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில், அவர் முதலையால்தான் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த அதிரடித் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

தற்போது மீட்கப்பட்டுள்ள உடல் பாகங்கள் காணாமல் போன அந்த தொழிலதிபருடையது தானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சவாலான ஆபரேஷனில் ஈடுபட்ட மீட்புக் குழுவினருக்கு மாகாண போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த ஆற்றுப் பகுதியில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக மழைக்காலங்களில் ஆற்றுப் பாலங்களைக் கடக்கும்போது கூடுதல் கவனம் தேவை என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

“>

 

டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, உயிரிழந்தவர் அந்தத் தொழிலதிபர் தானா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.