திருச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசிய அதிரடிப் பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள படுபயங்கர கண்டனம் தெரிவித்துள்ளார்!

எந்தவொரு அடிப்படை உழைப்போ, மக்கள் நலனுக்கான போராட்டங்களோ இல்லாமல் திடீரென சினிமா புகழால் மட்டுமே அதிகாரப் நாற்காலியில் வந்து உட்கார்ந்து கொண்டு தம்பி விஜய் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதாக அவர் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

மேலும், தமிழகத்தை உலுக்கிய சுனாமி பேரழிவு, கஜா புயல் கொடூரம், ஒட்டுமொத்த உலகையே முடக்கிய கொரோனா பேரிடர் காலங்களில் தமிழ்நாட்டு மக்களுக்காக விஜய் களத்தில் நின்று செய்த ஒரே ஒரு உழைப்பையோ அல்லது மக்கள் போராட்டத்தையோ தவெக-வினர் பட்டியலிட முடியுமா? என  கேள்வி எழுப்பியுள்ளார்.

மாஜி அமைச்சரின் இந்த அதிரடி அட்டாக், இப்போ தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும் விவாதங்களை உருவாக்கி  ஓடிக்கொண்டிருக்கிறது..!

“>