கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நீண்ட முடி வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியர் வகுப்பறையிலேயே முடி திருத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்தி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தியும், பெற்றோர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித மாற்றமும் ஏற்படாததால் தலைமை ஆசிரியர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இதற்காக அவர் நேரடியாக முடி திருத்தும் தொழிலாளர்களைக் காவல் துறையினர் முன்னிலையில் பள்ளிக்கு அழைத்து வந்து, வகுப்பறையிலேயே மாணவர்களின் முடியை வெட்டியது தற்போது கல்வியாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஒழுக்கத்தை நிலைநாட்ட ஆசிரியர் எடுத்த இந்தத் தீவிரமான நடவடிக்கை சரியா அல்லது தவறா என்ற கோணத்தில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
