உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் தொடக்கத்திலேயே வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய செயலியின் பயன்பாட்டை மேம்படுத்தும் விதமாக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது ஐஓஎஸ் பயனர்கள் தங்களுடைய பயன்பாட்டின் தீமை தனக்கு பிடித்தது போல மாற்றிக் கொள்வதற்கான வடிவமைப்புகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

உருவாக்க பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு பீட்டா சோதனையாளர்கள் சரிபார்ப்பிற்கு பின்னர் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த அம்சம் விரைவில் கிடைக்கும். பச்சை, நீலம், வெள்ளை, பவளம் மற்றும் மூதாகிய வெவ்வேறு வண்ணங்களில் இருந்து நமக்கு பிடித்த தீம்களை தேர்வு செய்து அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அம்சம் பயனர்களில் விருப்பத்திற்கு ஏற்றது போல பயன்பாட்டை அழகியலாக்கவும் தனிப்பயன் ஆக்க விரும்பும் பயனர்களுக்கு புத்துணர்ச்சியை தரும் வகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.