சமூக வலைத்தளங்களில் மெட்டா நிறுவனத்தின் instagram செயலி மிகவும் பிரபலமான செயலி. இந்த செயலியில் பயனர்கள் தங்களுக்கென ஒரு தனி கணக்கை தொடங்கி அதில் தங்களை பற்றி போஸ்ட் பதிவிடுவது மற்றும் ஸ்டோரி பகிர்ந்து வருகிறார்கள். அதன்படி உங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாரையாவது குறிப்பிட மறந்து விட்டால் உங்களுடைய ஸ்டோரியை டெலிட் செய்யவோ அல்லது re – upload செய்யவோ வேண்டாம். அதற்கு பதிலாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் add tags என்ற வசதி மூலம் உங்களுடைய ஸ்டோரியில் எளிதில் mention செய்ய முடியும்.

ஸ்டோரி பதிவிட்ட பிறகு எப்படி tag செய்வது?

முதலில் இன்ஸ்டாகிராமில் உள்ள உங்களுடைய ஸ்டோரி பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும். எந்த ஸ்டோரியில் உங்களுடைய நண்பரை tag செய்ய வேண்டுமோ அதனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு கீழே வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளி menu பட்டனை கிளிக் செய்து more என்பதை கொடுக்க வேண்டும்

அடுத்ததாக menu பக்கத்திற்குச் சென்று add mention என்பதை select செய்து உங்கள் நண்பருடைய user name type செய்தால் இன்ஸ்டாகிராம் அந்த பெயரை காட்டும்.

அடுத்ததாக add என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய நண்பர் பெயர் story இல் mention ஆகும்.