வாட்ஸ்அப் தன் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல புது அம்சங்களை அறிமுகம் செய்கிறது. அதன்படி, வாட்ஸ்அப் iOS-ல் சில சோதனையாளர்களுக்கு வீடியோ அழைப்புகளுக்குரிய திரை-பகிர்வு அம்சத்தை (ஸ்க்ரீன் ஷேரிங்க் ஃபீச்சர்) வெளியிடுகிறது.

பீட்டா பயனாளர்கள் வீடியோ அழைப்பின்போது கீழே ஒரு புது ஐகானை காண்பார்கள் என WABetaInfo தெரிவித்து உள்ளது. இந்த புது விருப்பம் பயனர்கள் தங்களது திரையின் உள்ளடக்கத்தை அழைப்பிலுள்ள அனைவருடனும் பகிர அனுமதிக்கும். இதை பயன்படுத்தும்போது பயனாளர்களின் திரையிலுள்ள அனைத்து செயல்பாடுகளும் அறிவிப்புகள் உட்பட படம்பி டிக்கப்பட்டு வீடியோ அழைப்பில் இணைக்கப்பட்டவர்களுடன் பகிரப்படும்.

வீடியோ அழைப்பின்போது திரையின் உள்ளடக்கத்தை பகிரும் திறன் சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. வருகிற வாரங்களில் மேலும் அதிகமான பயனாளர்களுக்கு இந்த வசதியானது கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.