வாழ்க்கையின் கடும் போராட்டங்களுக்கு மத்தியிலும், மனிதாபிமானம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வறுமையும் மென்மையும் ஒரே இடத்தில் வசிக்க முடியும் என்பதை இந்தத் தருணம் நிசப்தமாக உலகிற்கு உணர்த்துகிறது. ஒருபுறம் வாழ்வாதாரத்திற்கான கடும் உழைப்பு அல்லது வறுமையின் பிடியில் சிக்கிய வாழ்க்கை. மறுபுறம் எதையும் எதிர்பார்க்காத தூய்மையான அன்பு. இவை இரண்டும் முரண்பட்டவை என்றாலும், அந்தச் சிறுவனின் செயல் இவை இரண்டையும் இணைத்துள்ளது.
அதாவது அந்த சிறுவன் வறுமையின் பிடியில் இருக்கும் நிலையில் அவரிடம் வந்து ஒருவர் தனக்கும் சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுக்குமாறு கேட்கிறார். யோசிக்காமல் தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து பார்த்துவிட்டு உடனடியாக உதவி கேட்டவருக்கும் அந்தப் சிறுவன் சாப்பாடு வாங்கி கொடுக்க முன்வந்தான். இதைக் கேட்டவுடன் உதவி கேட்டவர் எனக்கு வேண்டாம் என்று நெகிழ்ச்சியாக கூறினார். மேலும் இருப்பவர்களே உதவி செய்ய தயங்கும் இந்த காலத்தில் தன்னிடம் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அந்த சிறுவனின் குணம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
A moment that quietly shows how innocence and hardship can exist together his kindness speaks louder than words 💔 pic.twitter.com/57LKry3Me1
— vipin talwar (@vipintalwar) April 13, 2026
