துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரக மத்திய வங்கி ஒரு அதிரடி கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
இனிமேல், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) போன்ற சமூக வலைதளச் செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்கள் கசிவதைத் தவிர்க்கவும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கவுமே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் வங்கிச் சேவைகள் மற்றும் தகவல்தொடர்புகள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது அந்தந்த வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட அழைப்பு மையங்கள் (Call Centers) வழியாக மட்டுமே நடைபெற வேண்டும் என மத்திய வங்கி கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கித் தரவுகள் மற்றும் பணம் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
