தேர்தல் வாக்குறுதிகள் என்றாலே கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். ஆனால், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) ஒரு மாணவர் கொடுத்த வாக்குறுதிகளைக் கேட்டு இணையமே சிரிப்பலையில் மூழ்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் நதீம் தரின் விடுதித் தேர்தலில் போட்டியிடும் அய்யூபா என்ற ஆப்பிரிக்க மாணவர் ஆற்றிய உரையின் வீடியோதான் இப்போது செம வைரல்.

 

View this post on Instagram

 

A post shared by Gazigraphy. (@gazigraphy_)

ஆரம்பத்தில் மிகவும் அமைதியாகப் பேசத் தொடங்கிய அய்யூபா, போகப்போக டாப் கியருக்கு மாறினார். “நான் ஜெயிச்சா ஹாஸ்டல் ரூம் ஒவ்வொன்னுக்கும் ஏசி, ஹாஸ்டலுக்குள்ளயே நீச்சல் குளம், ஒவ்வொரு மாடிக்கும் வாஷிங் மெஷின், அப்புறம் ஒரு நாளைக்கு மூணு வேளை இலவச டீ!” எனப் பட்டியலிட, மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஆனால் அதையெல்லாம் விட ஹைலைட் என்னவென்றால், ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்குச் செல்ல ‘மெட்ரோ ரயில்’ கொண்டு வருவேன் என அவர் சொன்னதுதான். இதைக் கேட்டு மாணவர்கள் விசிலடித்துக் கொண்டாடினர்.

அய்யூபாவின் சரளமான ஹிந்திப் பேச்சையும், அவரது உடல்மொழியையும் பார்த்த நெட்டிசன்கள், ‘3 இடியட்ஸ்’ படத்தில் வரும் ‘சதுர்’ கதாபாத்திரத்தோடு அவரை ஒப்பிட்டு வருகின்றனர்.

“இந்தியா இவருக்கு அரசியலை அருமையாகக் கற்றுக் கொடுத்துவிட்டது” எனப் பலரும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மையில் இவை சாத்தியமில்லை என்று தெரிந்தாலும், மாணவர்களின் கவனத்தை ஈர்க்க அய்யூபா கையாண்ட இந்த ‘காமெடி’ டெக்னிக் இப்போது அவரை இணையத்தின் ஸ்டார் ஆக்கியுள்ளது.