சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு ‘பிந்தாஸ்’ டிவியில் ஒளிபரப்பான ‘தாதாகிரி’ என்ற நிகழ்ச்சியில் நடந்த ஒரு மோதல் இன்றும் இணையதளங்களில் மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த பெண், ரவி பாட்டியா என்ற இளைஞரை திடீரென கன்னத்தில் அறைந்தார். இது முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒன்று என்பதால், கோபமடைந்த ரவி பாட்டியா உடனடியாக பதிலுக்கு அந்தப் பெண்ணையும் அறைந்தார். இதனால் அங்கிருந்த படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து ரவி பாட்டியாவைத் தாக்கினார்கள். அப்போது அவர் கேட்ட “அவர் எப்படி என்னை அடிக்கலாம்?” (How can she slap?) என்ற வார்த்தைகள் இன்று வரை உலகம் முழுவதும் வைரலாக பேசப்படுகிறது.

​இந்த ஒரு சம்பவம் ரவி பாட்டியாவின் வாழ்க்கையையே மாற்றியது. அந்த வீடியோ எவ்வளவு பிரபலம் என்றால், வெளிநாடுகளில் உள்ள சுவர்களில்கூட இந்தச் சம்பவம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ரவி பாட்டியா சோர்ந்து போய்விடாமல் கடுமையாக உழைத்து, இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் ஒரு வெற்றிகரமான நடிகராக உயர்ந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன சண்டை, ஒருவரை உலகப் புகழ்பெற்ற மனிதராக மாற்றிய சுவாரஸ்யமான கதை இது.