தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் தேதியை மாற்றி உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நவம்பர் 18 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தீபாவளி விடுமுறையை ஈடு செய்ய அன்றைய நாள் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.