விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், முதல் வேலை இதுவரையிலும் உங்களுக்கு தெரியாத வேலை அல்ல,  தெரிஞ்ச வேலை. ஆனால்  செய்யாத வேலை. அதைப்பற்றி எனக்கும் கவலை இல்லை,  அதனால உங்களுக்கும் கவலை இல்லை. இப்ப எனக்கு கவலை வந்துவிட்டது, உங்களுக்கும் கவலை வரணும். முதல் வேலை வாக்காளர் பட்டியலை எடுத்து அதை பார்க்க வேண்டும்.

என்னைக்காவது நாம இதை எடுத்து பார்த்திருக்கிறோமா ?  போலிங்க ஏஜென்ட் தான் போவான்.  அவன் மட்டும் தான் கைல வச்சிருப்பான். அந்த வார்டுல நூறு ஓட்டுனா…  அந்த 100 சீட்டு மட்டும்….  100 பேர் கொண்ட சீட்டு மட்டும் தான் அவன் கையில இருக்கும். மொத்த வாக்காளர் பட்டியலையும்…  அந்த பூத்துக்குட்பட்ட மொத்த வாக்காளர் பட்டியலையும்…  அதாவது அந்த ஊராட்சி… ஒன்றிரண்டு பூத் இருக்கும்… நான்கு பூத் இருக்கும்… வாக்காளர் பட்டியல் எடுக்கணும்.

எப்ப எடுக்கணும் ? எலக்சனுக்கு முதல் நாள் இல்ல.  ஜனவரி 1ஆம் தேதியில் வெளியிடுவாங்க… இப்ப டிசம்பர் வரப்போகுது.  இப்பதான் நீங்க எல்லாரும் கவனமாக கேட்கணும்.  இதுவரை நான் அரசியல் பேசினேன.  இப்பதான் உங்க Work பேச போறேன்.. நீங்க வந்ததற்கான காரணத்தை சொல்ல போறேன் ? நீங்க செய்ய வேண்டிய வேலையை சொல்ல  போறேன்…

நீங்கதான் இப்போதும் படை வீரர்கள்… கிளைச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லாம் அது தனி. அவர்கள் வேலை தனி. இப்ப உங்களுக்கு நாங்க கொடுத்திருக்கிற ஐடி கார்டு மாதிரி…  நாளைக்கு ப்ளாக் லெவல் ஆபிசர் உங்களுக்கு ஒரு ஐடி கார்டு கொடுப்பான். நாம ரெண்டு பேர் போட்டு இருக்கோம். இங்க 13,000 பேர் இருக்கீங்க. இதே மாதிரி 13000 பேர் இன்னும் ஊரிலேயே இருக்கிறான். அவனை கூப்பிடல..

அப்படி பார்த்தால் இதே மாதிரி இன்னொரு பெரிய அரங்கம் போடுவதற்கு இடம் இல்லை. சில மணி நேரத்துக்கு இந்த இடத்துக்கே பல லட்சம் வாடகை. 25 ஆயிரம் பேரை ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது. அதுக்கு இந்த மாதிரி இன்னொரு மடங்கு பந்தல் போட்டாகணும்.  அதனால இந்த பந்தல்ல 13,000 ,  14,000 ஷேர் போடப்பட்டிருக்கிறது. அது இல்லாமே தோழர்கள் நின்னுட்டு இருக்காங்க…

சிலபேர் வழக்கம்போல மாநாட்டில் இருக்கிற மாதிரி வெளியே போய் நிக்குற மாதிரி நின்னுட்டு இருக்காங்க. அவங்க இன்னும் சிஸ்டத்துக்குள்ள வருவதற்கு  கொஞ்சம் நாள் ஆகும். நீங்க கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் உட்கார்ந்து இருக்கீங்க. ரெண்டு மணியிலிருந்து உட்கார்ந்திருக்கிறீங்க. இப்ப மணி ஒன்பதரை. ஏழரை மணி நேரம் உட்கார்ந்து இருக்கிறீங்க.

அதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நீங்க பூத்துல ஓட்டு போடும்போது உட்கார்ந்து இருக்கிறது…. அப்பறோம் கொண்டு போய் பெட்டிய சேர்க்கும்போது அங்கு உட்கார்ந்து இருக்கணும்…  அப்போ என்னும்போது உட்கார்ந்து இருக்கணும்…  நிறைய உட்கார்ந்து இருக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. வெளியே எந்திரிச்சு போகாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டும் வேறு வழியே கிடையாது.

ஆங்கிலத்தில் எலக்ட்ரோலர் ரோல். தமிழ்ல வாக்காளர் பட்டியல். நீ எங்க வாக்காளராக பதிவு பண்ணி இருக்கியே, அந்த இடத்துல தான் நீ பூத்து ஏஜென்ட். பூத் ஏஜென்ட் வேற, போலிங் ஏஜென்ட் வேற. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. போலிங் ஏஜென்ட் எலக்சன்ல ஓட்டு போடற போது உள்ளே உட்கார்ந்தவன்…  வெளியே உட்காருகின்றவன், இரண்டு பேரு. அவன் தான் போலிங் ஏஜென்ட். அவன்  வேட்பாளரால் நியமிக்கப்படுகின்றவன்.

வேட்பாளர் கையெழுத்து போட்டு அவன் உள்ள போவான். அவனுக்கு ஒரு ஐடி கார்டு கொடுப்பாங்க. நீங்க போலிங் ஏஜென்ட் இல்ல. அதுக்கு மேல ப்ரமோஷன் உங்களுக்கு…  அதுக்கு மேல நீங்க…  இப்ப இருந்தே உங்களுக்கு வேலை தொடங்குகிறது..  இப்ப இருந்தே…. இன்று முதல் உங்களுக்கு வேலை தொடங்குது…  தேர்தல் அன்னைக்கு வேலை செய்றவன் பேரு போலிங் ஏஜென்ட். இன்னைல இருந்தே வேலை செய்பவர்கள் பூத் ஏஜென்ட். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குறது.

பூத் ஏஜென்ட் தொடர்ந்து இருக்கலாம். போலிங் ஏஜென்ட்  டெம்பரரி போல்தான் அணைக்கு ஒரு நாள். நீங்க போலிங்  ஏஜென்ட் இல்ல. 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் நீங்களே பூத் ஏஜென்டா இருக்கலாம். ஏனென்றால்  உங்களுக்கு திரும்பத் திரும்ப இந்த மாதிரி அரசியல் பயிற்சி  தேவைப்படுது. நம்முடைய எலக்சன் கமிஷன் உடைய சட்டம் என்ன சொல்கிறது என்றால் ? எலக்சன் கமிஷன் பதிவு பண்ணி வெளியிடக்கூடிய வாக்காளர் பட்டியலை எலக்சன் கமிஷனால்… தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகின்ற அதிகாரிகள் மட்டும் பார்வையிட்டால் போதாது,  வெரிஃபை செய்தால் போதாது… ஒவ்வொரு அரசியல் கட்சியாலும் நியமிக்கப்படுகின்ற முகவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. அவர்களும் நியமித்துக் கொள்ளலாம்.

அங்கீகாரம் பெற்ற கட்சி  வேறு,  பதிவு செய்யப்பட்ட கட்சி வேறு. நிரந்தரமா சின்னம் வச்சி இருக்கின்ற கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சி. சுயேச்சை சின்னத்தில் அப்பப்ப போட்டி போடுற கட்சி பதிவு பெற்ற கட்சி. ஆறு எம்எல்ஏ ஜெயிச்சா நாம அங்கீகாரம் வாங்கிடலாம். 2 எம்பி தனி சின்னத்தில் ஜெயிச்சா நாம் அங்கீகாரம் வாங்கிடலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்கு பெற்றால்,  யாருமே ஜெயிக்காம அந்த அளவுக்கு வாங்கு சதவீதம் பெற்றால்  அங்கீகாரம் பெறலாம். நாம போட்டிடுவதே ரொம்ப குறைச்சலான தொகுதி.

அதனால நம்முடைய வாக்கு சதவீதம் 1 % இல்ல 1.1% தான் வரும். நீங்க 234 தொகுதிகளையும் நின்னு சும்மா ஆள போட்டா கூட …. ஒவ்வொரு தொகுதிகளிலும் 3000,  4000 ஓட்டு எவனாவது போட்டுருவான்….  அது டோட்டலா கலெக்ட் பண்ணா அது 4, 5, 6  வந்துரும். 234இல்  நின்னா….  நாம அந்த மாதிரி ஒரு முறை கூட நிக்கல. ஒரு முக்கியமான விஷயம் நீங்க புரிஞ்சுக்கணும் என தெரிவித்தார்.