வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1 ஆம் தேதி, ஏப்ரல் 1 ஆம் தேதி, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் இளைஞர்கள் அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்தில் காணலாம். இங்கு வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்