தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தியாகராய பாகவதர். இவர் கர்நாடக இசையமைப்பாளர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். தியாகராய பாகவதர் 14 படங்களில் நடித்திருந்தாலும் 10 படங்கள் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை புரிந்தவை. இவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் தொடர்ந்து 3 வருடங்களாக திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்தது. தியாகராய பாகவதர் தன்னுடைய 49 வயதில் சர்க்கரை நோய் காரணமாக உயிரிழந்த நிலையில் தற்போது அவருடைய குடும்பத்தினர் வறுமையில் வாடி வருகிறார்கள்.

தியாகராய பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம் தற்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வறுமையில் வாடி வருகிறார். இவருக்கு அரசாங்கம் ஏற்கனவே உதவி செய்திருந்த நிலையில் தற்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும் வறுமையில் வாடுவதன் காரணமாக தான் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை எனவும் சாய்ராம் கூறியுள்ளார். மேலும் இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு தமிழக உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.