நடிகர் தனுஷின் மாரி உட்பட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார் ரோபோ சங்கர்.

இந்நிலையில் சென்னை சாலிகிராமத்திலுள்ள ரோபோ சங்கர் வீட்டில் அனுமதி இல்லாமல் வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டியிலுள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.