ஹாலிவுட்டின் பிரபல டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் அவரது த டெர்மினேட்டர், ஏலியன்ஸ், ட்ரூ லைஸ், டைட்டானிக், அவதார் போன்ற திரைப்படங்களின் வாயிலாக உலகளவில் உள்ள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒருவர் ஆவார். பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் அண்மையில் “உலக அளவில் 2022ம் வருடம் அதிகம் சம்பாதித்த கலைஞர்கள்” பற்றிய டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் பிரபல இசைக்குழுவான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த “ஜெனிசிஸ்” 230 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1905 கோடி வருமானத்தை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் 100 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 828 கோடி ரூபாய் பெற்று 6 ஆம் இடத்தில் உள்ளார். அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் 95 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 787 கோடி ரூபாய் வருமானத்தை பெற்று 7ம் இடத்தைப் பிடித்து உள்ளார். இதன் வாயிலாக உலகளவில் உள்ள திரைப்பட இயக்குனர்களில் அதிக வருமானத்தை பெறக்கூடிய டைரக்டர் என்ற சாதனையை பெற்றுள்ளார். அவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு “அவதார் 2” திரைப்படம் வெளிவந்து 2.2 பில்லியன், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18,227 கோடி ரூபாய் வசூலைக் கடந்து உள்ளது. அடுத்ததாக அவதார் 3 படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.