தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் சூரியா 42 10 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா மும்பையில் வைத்து பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். நடிகர் சூர்யா தீவிர கிரிக்கெட் ரசிகராக இருக்கும் நிலையில் சச்சின் டெண்டுல்கரை எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து தமிழில் ட்வீட்‌ செய்துள்ளார். அதில் இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.