தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக பிரபல ஹீரோயினியாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இப்போது ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகை அனிகா அண்மையில் தன் படத்தின் புரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நயன்தாரா பற்றி possitive மற்றும் negative கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது “நயன்தாரா மிகவும் கனிவானவர் எனவும் என்னிடம் எப்போதுமே அன்பாக நடந்துக்கொள்வார் எனவும் பாசிட்டிவ்வான விஷயங்களை முதலில் கூறினார். அதன்பின் நயன்தாரா மேக்கப் போட்டுக்கொள்வதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்வார் என நெகட்டிவான விஷயத்தையும் பேட்டியில் விளையாட்டாக கூறியுள்ளார் அனிகா. அதாவது, சிலநேரம் மட்டுமே நயன்தாரா அப்படி செய்வார்” என குறிப்பிட்டு கூறியுள்ளார்.