வரும் நிதி ஆண்டில் உங்களின் வருமான வரியில் சுமார் ரூபாய்.1.5 லட்சம் வரை விலக்கு பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரிவு 80, (80CC & 80CCD) ஆகியவற்றின் படி பின்வரும் வழிமுறைகளின் கீழ் ரூபாய்.1.5 லட்சம் வரை வரி விலக்கினை கோரலாம். ஊழியர் வருங்கால வைப்புநிதி வாயிலாகவும், நீங்கள் வரிகளைச் சேமிக்கலாம்.

இந்த திட்டத்துக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையில் 12% பங்களிப்பானது பிரிவு 80Cன் கீழ் ரூபாய்.1.5 லட்சமாக கணக்கிடப்படுகிறது. வரி செலுத்துவோர் இந்திய வருமான வரிச்சட்டம், 1961ன் பிரிவு 80C-இன் கீழ் வரிச்சலுகையை பெறக்கூடிய, நிலையான வைப்புத் தொகையில் (Fixed Deposit) முதலீடு செய்வதன் மூலமாக வரியை சேமிக்கலாம். வரிசெலுத்துவோர், நிலையான வைப்புத் தொகைகளில் முதலீடு செய்வதன் வாயிலாக அதிகபட்சம் ரூபாய்.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம்.