2025-26 பிக் பாஷ் லீக் (BBL) டிசம்பர் 14, 2025 அன்று தொடங்கி, ஜனவரி 25, 2026 அன்று முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை எந்த இந்திய ஆண் வீரரும் பிக் பாஷ் லீக்கில் விளையாடாத நிலையில், இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த வரலாற்றை மாற்றவுள்ளார்.

ESPNcricinfo வெளியிட்ட தகவலின்படி, சிட்னி தண்டர், ஹோபார்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்சர்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் ஆகிய நான்கு முக்கிய BBL அணிகளும் அஸ்வினை தங்களது அணியில் சேர்க்க விரும்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தண்டர் மற்றும் ஹரிகேன்ஸ் அணிகள் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BCCI விதிகளின்படி, ஓய்வுபெற்ற இந்திய வீரர்களுக்கு மட்டுமே வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதி அளிக்கப்படுகிறது.

அதனால், IPL மற்றும் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தான் அஸ்வின் BBL-ல் பங்கேற்க முடியும். இதற்குமுன், ராபின் உத்தப்பா (ILT20), அம்பதி ராயுடு (CPL), தினேஷ் கார்த்திக் (SA20), யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா (T10) ஆகியோர் மட்டும் வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்றனர்.

இந்நிலையில், அஸ்வின் BBL-ல் விளையாடும் முதல் இந்திய ஆண் வீரராக மாறும் வாய்ப்பு பெருகியுள்ளது. ILT20 ஏலத்திலும் அஸ்வின் முன்பதிவு செய்துள்ளதால், இரண்டு லீக்குகளுக்கு இடையில் கால அட்டவணை மற்றும் அனுமதிகளில் சிறு குழப்பமும் நிலவுகிறது.

எனினும், பிக் பாஷ் லீக் அஸ்வினை தங்கள் அணியில் சேர்த்தால், அது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும்.