வெளிநாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை (Mundial) முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு வீட்டில் அனைவரும் திரண்டுள்ளனர். ஆட்டத்தின் விறுவிறுப்பை பெரிய திரையில் ரசிப்பதற்காக, குடும்பத்தினர் அனைவரும் ஹாலில் ஒன்று கூடி, ஆவலோடு ஸ்மார்ட் டிவியை ஆன் செய்துள்ளனர். ஆனால், டிவி ஆன் ஆன அடுத்த கணமே, அங்கு திரையில் தோன்றிய காட்சி மேட்ச் பார்க்க வந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் அப்படியே அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.

​காரணம், அந்த வீட்டின் வயதான தாத்தா, யாருக்கும் தெரியாமல் அந்த ஸ்மார்ட் டிவியில் ஏராளமான ஆபாச இணையப் பக்கங்களை (Porno pages) பார்த்துவிட்டு, அவற்றை ஹிஸ்டரியில் அப்படியே சேமித்து வைத்துள்ளார். மேட்ச் பார்க்க டிவியை ஆன் செய்த குடும்பத்தினர், கூகுள் க்ரோம் பக்கத்தில் வரிசையாக இருந்த அந்த ஆபாச தளங்களைப் பார்த்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துள்ளனர். தாத்தாவின் இந்த ரகசிய லீலை குடும்பத்தினர் மத்தியில் அம்பலமான இந்த ஃபன்னியான செய்தி, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் பயங்கரமாக ஷேர் செய்யப்பட்டு விவாதப் புயலைக் கிளப்பி வருகிறது.