ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியின் போது, மேடையில் நடனக் கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர், திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு மேடைக்கு அருகில் வந்து அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ஆட்டம் போடத் தொடங்கினார். அவரின் விசித்திரமான மற்றும் நகைச்சுவையான நடன அசைவுகளைக் கண்டு அங்கிருந்த மக்கள் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர்.
View this post on Instagram
“>
மேலும் அந்த முதியவரின் தன்னம்பிக்கையும், வயது வித்தியாசமின்றி அவர் காட்டிய உற்சாகமும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘வயதானாலும் மனதளவில் இன்னும் இளைஞராகவே இருக்கிறார்’ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேடை கலைஞர்களை விடவும் முதியவரின் இந்த அதிரடி ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
