தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்துவரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கண்டித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தைக் கொடூரக் குற்றங்கள் நிகழும் ஒரு வன்முறை மாநிலமாக மாற்றி வைத்திருப்பதுதான் உங்கள் ‘திராவிட மாடலா?’ என்று அவர் தமிழக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரும்புக் கரம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டிய சட்டம் ஒழுங்கு, தினசரி கொலைகளும் தாக்குதல்களும் சாதாரணமாக நடக்கும் நிலைக்குச் சீர்குலைந்து தமிழகத்தைத் தலைகுனிய வைத்துவிட்டதாகவும் அவர் தனது பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.