சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கூட்டணியை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளார். அதிமுகவுடன் அன்புமணி தரப்பு நெருக்கம் காட்டி வந்ததால், திமுக பக்கம் ராமதாஸ் சாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், பாமகவைச் சேர்த்துக் கொண்டால் தலித் மக்களின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்று கருதி, தவெக இந்தக் கூட்டணியை நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
