கடந்த 2021-ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி என்பவர் தலைமையிலான அரசாங்கம் நடைபெற்ற வந்தது. ஆனால் அவர் போட்டியிட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக அவரது அரசாங்கத்தை கலைத்துவிட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. பின்னர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். இதற்காக நாடு முழுவதும் பெரும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவத்தினர் கடுமையான வன்முறைகளை காட்டினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோருக்கு மேல் உயிரிழந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ராணுவத்தினரின் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டில் பல்வேறு இடங்களில் மோதல்கள் நடைபெற்று வந்தது. எனவே ராணுவத்தினரின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐநா சபையும், பல உலக நாடுகளும் வற்புறுத்தி வந்துள்ளது. இந்த நிலையில் இராணுவ ஆட்சித் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இதற்கு முன்பு‌ நடந்த தேர்தலில் மோசடி ஏற்பட்டதால் தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு நாங்கள் ஆட்சியை‌ கைப்பற்றினோம்.

தற்போது ராணுவத்தினரின்‌ஆட்சியையும் கவிழ்க்க நினைக்கிறார்கள். எனவே இதன் பின்பு நடைபெறும் தேர்தலில் நாங்கள் நேர்மையான முறையில் தேர்தலை நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்களை ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்திற்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் 4 ஆண்டுகளாக ஆட்சி செய்த ராணுவத்தினர் நிலை அவசர முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் ‌வருகிற‌ தேர்தலுக்காக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு மற்றும் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி போன்றவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் நேரத்தில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என புதிய ஒரு சட்டத்தையும் அரசாங்கம் இயற்றி உள்ளது.