மதுரை மாவட்டத்திலுள்ள சாப்டூர் வனத்துறை அதிகாரி கூறியதாவது, 25,000 ஏக்கரில் அமைந்துள்ள சாப்ட்வேர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்கு முயல், காட்டுப்பன்றிகள், மயில், மான், பறவை இனங்கள் வசித்து வருகிறது. சில மர்ம நபர்கள் வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். எனவே சட்ட விதிமுறைகளை மீறி வனவிலங்குகளை வேட்டையாடினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காட்டு பன்றிகளுக்காக சில விவசாயிகள் தங்களது நிலங்களில் மின்வேலி அமைப்பதும் வனத்துறை சட்டப்படி குற்றமாகும் என தெரிவித்தார்.