சமூக ஊடகங்களில் நாள்தோறும் வித்தியாசமான காணொளிகள் மற்றும் சம்பவங்கள் பரவி கொண்டே வருகின்றன. சில வீடியோக்கள் நகைச்சுவையையும், சில அதிர்ச்சியையும் தருவதால் மக்கள் அவற்றில் மூழ்கி விடுகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி வைரலான ஒரு வீடியோ, கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

இந்த வீடியோ, ஒரு நெரிசலான சந்தையில் படம் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு சாதாரண வாக்குவாதமாகத் தோன்றியது, ஆனால் பின்னர் அது உடல் ரீதியான மோதலாக மாறியது. அதில் மனைவி தனது கணவரிடம் கடுமையான கோபத்துடன் செயல்படுவது தெளிவாகக் காணப்படுகிறது. அவர், தனது கணவரை அடிக்கத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், அவரை சாலையோர சாக்கடைக்குள் இழுத்து தாக்கினர்.

 


இந்த காட்சிகள் அருகில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பலர் கையாளாமல் நிற்பதற்குப் பதிலாக, தங்களுடைய செல்போன்கள் மூலம் வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்தனர். தற்போது இந்த வீடியோ @gharkekalesh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. வீடியோவில், கணவன்  அமைதியுடன்  இருந்தபோதிலும் மனைவி தொடர்ந்து தாக்கியபோதும், அங்கிருந்தவர்களில்  ஒருவர் கூட தலையிடாமல் பார்த்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சண்டையின் போது இருவரும் கீழே விழுந்தபோதும், மனைவி தாக்குதலைத் தொடர்ந்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.