டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் KCR-ன் மகள் கவிதா கைதான நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த வழக்கில் ED சம்மனுக்கு தடை, நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தவிர்க்க ED அலுவலகத்தில் இன்று அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ED அவருக்கு 8 முறை சம்மன் அனுப்பியுள்ளது.