நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின் சார்பாக அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீட்டு அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 2024-25 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் ஒன்பதாம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://nta.ac.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் அல்லது 011- 40759000  என்ற தொலைபேசி எண் அல்லது [email protected]  என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.