பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை ஐசிசி விதித்துள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தில் முதல் ஆட்டத்திற்கு முன்பாக வெறும் ஏழு முறை தான் பயிற்சி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் சிஎஸ்கே போன்ற அணிகள் தங்களுடைய சொந்த மைதானத்திலேயே பயிற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக போட்டி முடிவடைந்த உடன் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கும்போது வீரர்கள் தங்களுடைய கை இல்லாத ஜெர்சிகளை அணிந்து கொண்டு வருவார்கள். இதன் மூலம் சிலர் விளம்பரங்கள் ஜெர்சியில் இடம்பெறாமல் போய்விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து இனி கை இல்லாத ஜெர்சியை பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு வீரர்கள் அணிந்து வரக்கூடாது. ஒரு முறை அணிந்து வந்தால் எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறை அதை தவறை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.