தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடல் போன்றவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய பிறகு அதிகாரப்பூர்வமாக தமிழக அரசியல் களத்திற்குள் நுழைந்து விட்டதால் அவருடைய அரசியல் வருகை பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கருணாசும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி தன் கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, நடிகர் விஜய் சேவை மனப்பான்மையுடன் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வந்தது நல்ல விஷயம் தான். இருப்பினும் வேடிக்கை பார்ப்பது வேறு ஓட்டு போடுவது வேறு.

நடிகர் விஜய் அரசியல் மிக எளிதானது என்று நினைக்கிறார். ஆனால் அவர் நினைக்கும் அளவுக்கு அது சுலபமானது கிடையாது. வேடிக்கை பார்க்க கூட்டம் வருமே தவிர ஓட்டு போட மாட்டார்கள். நடிகர் வடிவேலு அரசியலுக்கு வந்தபோது அவரை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக வந்தார்கள். ஆனால் அந்த கூட்டம் அவருக்கு எந்தவித பலனையும் அளிக்கவில்லை. அதேபோன்றுதான் விஜயும். மேலும் ‌ சினிமாவில் விஜய் பெரிய ஆள் என்பதில் சந்தேகம் கிடையாது. அதே சமயத்தில் அரசியலைப் பொறுத்தவரை உதயநிதி தான் பெரிய ஆள்.

ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி வசம் திமுக சென்றால் தமிழக அரசியல் களத்தில் விஜய் மற்றும் உதயநிதிக்கு போட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விஜயை உதயநிதியுடன் ஒப்பிட்டு பேச முடியாது. ஏனெனில் உதயநிதி அரசியலில் பெரிய ஆள் என்றார்.

ஆரம்பத்தில் வடிவேலு அரசியலுக்கு வந்த போது அவரை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்தார்கள். ஆனால் ஓட்டு என்று வரும்போது முற்றிலும் அது பொய்யாகிவிட்டது. அனைவரையும் எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். ஆனால் எம்ஜிஆரின் அரசியலை ஆரம்பத்தில் இருந்து கவனிக்க வேண்டும். அன்றைய காலகட்டம் வேறு இன்றைய காலகட்டம் வேறு. யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று கூறினார்.

மேலும் கடைசியில் கூட்டத்தை பார்த்து ஓட்டு வராது என விஜய்யை வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.