வடகொரியா அவ்வப்போது அமெரிக்கா தென்கொரியாவிற்கு எதிராக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது வழக்கம். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவும். இந்நிலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா என மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை இன்று மேற்கொண்டது.

தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் நடுவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் இந்த ஒத்தியை மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாடுகளின் ஏஜிஸ் ரேடார் அமைப்புகளுடன் உருவாக்கியுள்ள ஏவுகணை அழிப்பான்களை சோதனை செய்து பார்த்துள்ளனர். இதுகுறித்து தென் கொரியா கடற்படை அதிகாரி கூறுகையில், “வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு முத்தரப்பு ஒத்துழைப்புடன் எங்கள் ராணுவம் வலுவான பதில் கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.