2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் கைக்கு சென்றதிலிருந்து பெண்களின் உரிமை பறிக்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று பெண்கள் கல்வி கற்பது. பள்ளிகளுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆப்கானை சேர்ந்த சிறுமி ஒருவர் சமீபத்தில் தனது தந்தையிடம் கல்வி குறித்து பேசிய காணொளி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த காணொளியில் பெண்களுக்கு கல்வி எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சுட்டிக்காட்டி சிறுமி தைரியமாக பேசியுள்ளார். காணொளியில் என்னை ஏன் பள்ளிக்கு விடமாட்டேன் என கூறுகிறீர்கள் என்று தந்தையிடம் சிறுமி கேள்வி எழுப்ப அதற்கு அவர் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி எனக் கூறுகிறார். உடனே சிறுமி பள்ளிக்கல்வி பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் சண்டை மற்றும் அழிவு ஆகிய இரண்டும் இரண்டும் தான் ஆண்களுக்கு எனக் கூறுகிறார்

அதிக அளவு ஆண்கள் தான் அழிவை ஏற்படுத்திகிறார்கள். பெண்களால் எந்த அழிவும் ஏற்படவில்லை என்று கூறி நான் நன்றாக பள்ளி படிப்பை முடித்து எதிர்காலத்தில் ஆசிரியராகவோ டாக்டராகவோ இஞ்சினியராகவோ ஆக வேண்டும். இதுதான் எனது ஆசை என தைரியமாக கூறியுள்ளார். இந்த காணொளியை பார்த்த பலரும் சிறுமியின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

 

வீடியோவை காண