சீனாவின் சாண்டாங் நகரில் அமைந்துள்ள பார்லர் தான் Wanren Tattoo. இந்தப் பார்லரின் உரிமையாளர் சாங் தனது சமூக அறிவியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் சுயவிபரத்தை டேட்டூவாக போட்டுக் கொடுக்கப்படும் என்றும் வயதானவர்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் இதற்கு ஆதரவு அளிக்கும்  வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் “தொலைந்து போகும் வலியை விட டாட்டூ போடும் வழி குறைவுதான்” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.