இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் முன்னரே வெளியிடப்படுவது வழக்கம். இதனை அறிந்து வாடிக்கையாளர்கள் முன்னரே வங்கி தொடர்பான வேலைகளை முடித்துக் கொள்ள வசதியாக ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அதன்படி வர இருக்கும் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகி உள்ளது. அதில் மே மாதம் வங்கிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட மொத்தம் 12 நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மூலமாக சேவைகள் தடை இன்றி வழங்கப்படுகிறது.

விடுமுறை பட்டியல்:

மே 1: மே தினம், மகாராஷ்டிரா தினம்

மே 5:  புத்த பூர்ணிமா டெல்லி, ஹரியானா, பஞ்சாப், அசாம், உத்ரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 7:  ஞாயிறு விடுமுறை

மே 9: ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்

மே 13:  2வது சனிக்கிழமை விடுமுறை

மே 14: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

மே 16: சிக்கிம் தினம்

மே 21: ஞாயிறு விடுமுறை

மே 22: மகாராணா பிரதாப் ஜெயந்தி குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 24: காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி – திரிபுரா பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 27:  4 – வது சனிக்கிழமை விடுமுறை

மே 28: ஞாயிறு விடுமுறை