இந்தியாவில் வங்கி சார்ந்த பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டாலும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் வங்கியை நேரடியாக அணுக வேண்டி உள்ளது. இது போன்ற சூழலில் வங்கிகள் எப்போது இயங்கும் எப்போது விடுமுறை என்ற விவரங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது.