அரசு வேலை கிடைத்து 24 மணி நேரத்தில் இளைஞரை கடத்தி சென்று திருமணம் செய்ய வைத்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கௌதம் குமா.ர் 26 வயதான இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வருடமாக இவர் திருமணத்திற்காக பெண் தேடிவந்தார்.  ஆனால் பெண் கிடைக்கவில்லை. இதனிடையே இவருக்கு சமீபத்தில் பீகார் அரசு தேர்வாணையத்தில் வெற்றி பெற்றதால் அரசு வேலை கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த கௌதம் குமார் பணி நியமன ஆணை வாங்கி வருவதாக தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயந்து போன அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்த தேடுதல் வேட்டையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் கௌதம் குமாரை அவர்கள் திருமண கோலத்தில் கண்டுபிடித்துள்ளனர். காவல்துறையினரை பார்த்ததும் மனமடையில் இருந்து அலறிக்கொண்டு ஓடி வந்த கௌதம் குமார் தன்னை பெண்ணின் தந்தை துப்பாக்கி முனையில் கடத்தி வந்து கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததாக கூறி அழுதுள்ளார் .

இதனை அடுத்து பெண்ணின் தந்தையிடம் விசாரணை செய்ததில் தன்னுடைய மகளுக்கு ஒரு அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளையை தான் கட்டி வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்ததாகவும் அதனால் இவரை கடத்தி சென்று தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் கௌதம் குமாரை மீட்டு வந்தனர். மேலும் இந்த திருமணத்தை ரத்து செய்வது குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது அரசு வேலை மீதான மோகம் மக்களுக்கு இன்னும் குறையவில்லை என்பதுதான்.