உலகம் முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதி எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் எச்ஐவி தொற்றை முழுமையாக விரட்ட பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும் எச்ஐவி பரவாமல் தடுக்க சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் புதிய எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான தாய்மார்கள் எச்ஐவி பரிசோதனை செய்து வரும் நிலையில் புதுச்சேரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 3000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத மாநிலமாக புதுச்சேரி உருவாக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்