உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கி மேலாளரின் அறையில், இளம் பெண் ஒருவர் பாலிவுட் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோக்களில், பிரபலமான ஹிந்திப் பாடல்களுக்கு அந்தப் பெண் வங்கியின் உள்ளேயே தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகிறார்.
இதனால் அவருக்கு எதிரே நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபர் அந்த வங்கியின் மேலாளர் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ குளிர் காலத்தில் எடுக்கப்பட்டதாகத் தோன்றும் நிலையில், தற்போது இது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொதுத்துறை அல்லது வங்கி போன்ற பொறுப்பான அரசு சார்ந்த பணிகளில் இருக்கும் அதிகாரிகளின் இத்தகைய பொது நடத்தை மற்றும் ஒழுக்கம் குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
यूपी के हरदोई में एक बैंक मैनेजर के कमरे में युवती ने ठुमके लगाए। हालांकि वीडियो काफी दिन पुराना है, लेकिन सोशल मीडिया पर अब वायरल हो रहा है। जिसके बाद लोग मैनेजर के सामाजिक व्यवहार पर प्रश्न चिह्न लगा रहे हैं। #hardoi pic.twitter.com/FQDiDMVQmk
— Pawan Kumar Sharma (@pawanks1997) May 16, 2026
“>
இந்நிலையில் ‘வங்கியின் பணி நேரத்தில் அல்லது அதன் வளாகத்திற்குள் இவ்வாறான செயல்கள் வங்கியின் கண்ணியத்தையும், தொழில்முறை ஒழுக்கத்தையும் சீர்குலைப்பதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதமே கிளம்பியுள்ளது.
