இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் தெலங்கானா MP எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3ம் இடத்திலும் உள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை 27,53,860 கோடியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இகனைதொடர்ந்து  வங்கிகளில் லோன் வாங்கியோரிடம் கறாராக வசூல் செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுபோன்ற புகார் என் கவனத்திற்கும் வந்தது. அரசு & தனியார் வங்கிகள் அனைத்திற்கும் இது தொடர்பாக அறிவுறுத்தியுள்ளோம். கடனை கறாராக வசூலிக்காமல் மனிதாபிமானத்துடன் அணுக உத்தரவிட்டிருக்கிறோம்” என்றார்