தமிழகத்தில் சமீப காலமாகவே குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குழந்தை திருமணங்களை தடுத்தல் தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் மாவட்ட ஆட்சியகத்தில் நடைபெற்றது. இதில் குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.