மத்திய அரசு அலுவலகங்களை போல இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவது தொடர்பாக இந்திய வங்கி சங்கம் முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வங்கிகள் மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் திறந்திருக்கும். UbFU வங்கிகளுக்கான வேலை நாட்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு வாரம் தோறும் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் எனவும் கோரிக்கை எழுந்த நிலையில் அது நிறைவேறும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வங்கி ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 40 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஐந்து வேலை நாட்கள் என்ற விதியை அரசாங்கம் அமல்படுத்திய பின்னர் அனைத்து வங்கிகளுக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை குறித்த விவாதம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. எனவே இது தொடர்பாக விரைவில் ஆலோசித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.